ஓசூரில் அச்சக உரிமையாளர் மீது சிறுமி சில்மி‌‌ஷ புகார் போலீசார் விசாரணை


ஓசூரில் அச்சக உரிமையாளர் மீது சிறுமி சில்மி‌‌ஷ புகார் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Dec 2019 3:45 AM IST (Updated: 11 Dec 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில், அச்சக உரிமையாளர் சில்மி‌‌ஷம் செய்ததாக, கேரள மாநிலத்தில் சிறுமி கொடுத்த புகார், ஓசூருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஓசூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த 40 வயது பெண் ஓசூரில் உள்ள அச்சகம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இதன் உரிமையாளர் வீட்டிற்கு வரும் போதெல்லாம், தன்னை சில்மி‌‌ஷம் செய்ததாக அந்த பெண்ணின் 16 வயது மகள் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி தனது சொந்த ஊரான கேரள மாநிலம் கண்ணூர் போலீசில் புகார் செய்தார். இந்த நிலையில், கேரள மாநிலத்தில் இருந்து, ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சிறுமி கொடுத்த வழக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக, நேற்று முன்தினம் ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணை

சிறுமி தன்னை சில்மி‌‌ஷம் செய்ததாக கூறும் அச்சக உரிமையாளர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது அச்சகம் அங்கு இயங்கவில்லை.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story