நெல்லையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி


நெல்லையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி
x
தினத்தந்தி 10 Dec 2019 10:45 PM GMT (Updated: 10 Dec 2019 8:07 PM GMT)

நெல்லையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நேற்று நடைபெற்றது.

நெல்லை,

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி உத்தரவுப்படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ரா‌‌ஷ்டிரிய அவி‌‌ஷ்கார் அபியான் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மண்டல அளவிலான வினாடி-வினா போட்டி நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் அந்தந்த மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்த நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பரிசுகள்

தலைமை ஆசிரியை ஆனந்த பைரவி தொடங்கி வைத்தார். டவுன் ஜவஹர் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மாலா, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகராஜன், வெள்ளாளன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போட்டியில் விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2-வது இடத்தையும், தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் சேது சொக்கலிங்கம் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Next Story