மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சொக்கப்பனை எரிப்பு + "||" + Flaming torches at Thiruchendur Subramanya Swamy Temple

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சொக்கப்பனை எரிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சொக்கப்பனை எரிப்பு
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர்,

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெற்றது.


காலையில் மூலவர் மற்றும் சுவாமி ஜெயந்திநாதருக்கு கார்த்திகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் மகா மண்டபத்தில் நாரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோவில் அனைத்து சன்னதிகளிலும் தீப விளக்குகள் ஏற்றப்பட்டன.

சொக்கப்பனை எரிப்பு

பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் கடற்கரையில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூரில் பொங்கல் பொருட்கள் வாங்க அலை மோதிய பொதுமக்கள்
திருப்பூர் மார்க்கெட்டில் பொங்கல் பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மல்லிகைப்பூ கிலோ ரூ.2,400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
2. கார்த்திகை தீபத்திருநாளையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
கார்த்திகை தீபத்திருநாளையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
3. திருநகரி கல்யாணரெங்கநாதர் கோவிலில் திருமங்கையாழ்வார் தங்க குதிரை வாகனத்தில் வீதிஉலா
திருநகரி கல்யாணரெங்கநாதர் கோவிலில் திருமங்கையாழ்வார் தங்க குதிரை வாகனத்தில் வீதிஉலா காட்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
4. கார்த்திகை தீபத்தையொட்டி கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
கார்த்திகை தீபத்தையொட்டி கோவில்களில் ெசாக்கப்பனை கொளுத்தப்பட்டது.
5. எளம்பலூர் பிரம்மரி‌ஷி மலையில் கார்த்திகை மகா தீபவிழா
எளம்பலூர் பிரம்மரி‌ஷி மலையில் கார்த்திகை மகா தீபவிழா நடைபெற்றது.