பிவண்டியில், நகைக்காக மூதாட்டியை கொலை செய்த தம்பதி கைது
பிவண்டியில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
தானே,
இதையடுத்து போலீசார் குளம் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு தம்பதி மூதாட்டியின் உடலை குளத்தில் வீசிச்செல்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அவரது உறவினர்களான சோம்நாத்(37), அவரது மனைவி நீலம் (31) ஆகியோர் சேர்ந்து தான் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது.
மூதாட்டியின் கணவர் மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் உயிரிழந்த பிறகு மூதாட்டிக்கு மாத ஓய்வூதியம் வந்துகொண்டிருந்தது. அந்த பணத்தை வைத்து மூதாட்டி அதிகளவில் தங்கநகைகளை வாங்கி அணிந்து உள்ளார்.
சோம்நாத்துக்கு அதி களவில் கடன் இருந்து உள்ளது. அந்த கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்து வந்தார். இந்தநிலையில், கடந்த 21-ந்தேதி சோனுபாய் அவர்களது வீட்டுக்கு வந்து உள்ளார். அவர் நகைகள் அணிந்திருப்பதை பார்த்ததும் கணவர், மனைவி இருவரும் சேர்ந்து சோனுபாயை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி இருவரும் சேர்ந்து அவரை துணி துவைக்கும் கட்டையால் அடித்துக் கொன்று நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் இரவு சோம்நாத் தனது நண்பர் ஒருவரின் வாகனத்தில் உடலை ஏற்றிக் கொண்டு ஏரியில் வீசியது தெரியவந்தது.
கணவர், மனைவி இருவரும் 'கிரைம் பேட்ரோல்' போன்ற டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்து சோனுபாயை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சோம்நாத் மற்றும் அவரது மனைவி நீலத்தை கைது செய்து, அவர்களது வீட்டில் மறைத்து வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான மூதாட்டியின் நகைகளை மீட்டனர்.
தானே மாவட்டம் பிவண்டி, சவுதரி பாடா பகுதியில் உள்ள குளத்தில் இருந்து கடந்த மாதம் 22-ந்தேதி போலீசார் கொலை செய்யப்பட்ட மூதாட்டி ஒருவரின் உடலை மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மூதாட்டி சவுதரி பாடா பகுதியை சேர்ந்த சோனுபாய்(வயது70) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் குளம் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு தம்பதி மூதாட்டியின் உடலை குளத்தில் வீசிச்செல்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மூதாட்டியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அவரது உறவினர்களான சோம்நாத்(37), அவரது மனைவி நீலம் (31) ஆகியோர் சேர்ந்து தான் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது.
மூதாட்டியின் கணவர் மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் உயிரிழந்த பிறகு மூதாட்டிக்கு மாத ஓய்வூதியம் வந்துகொண்டிருந்தது. அந்த பணத்தை வைத்து மூதாட்டி அதிகளவில் தங்கநகைகளை வாங்கி அணிந்து உள்ளார்.
சோம்நாத்துக்கு அதி களவில் கடன் இருந்து உள்ளது. அந்த கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்து வந்தார். இந்தநிலையில், கடந்த 21-ந்தேதி சோனுபாய் அவர்களது வீட்டுக்கு வந்து உள்ளார். அவர் நகைகள் அணிந்திருப்பதை பார்த்ததும் கணவர், மனைவி இருவரும் சேர்ந்து சோனுபாயை கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி இருவரும் சேர்ந்து அவரை துணி துவைக்கும் கட்டையால் அடித்துக் கொன்று நகைகளை கொள்ளையடித்தனர். பின்னர் இரவு சோம்நாத் தனது நண்பர் ஒருவரின் வாகனத்தில் உடலை ஏற்றிக் கொண்டு ஏரியில் வீசியது தெரியவந்தது.
கணவர், மனைவி இருவரும் 'கிரைம் பேட்ரோல்' போன்ற டி.வி. நிகழ்ச்சிகளை பார்த்து சோனுபாயை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சோம்நாத் மற்றும் அவரது மனைவி நீலத்தை கைது செய்து, அவர்களது வீட்டில் மறைத்து வைத்திருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான மூதாட்டியின் நகைகளை மீட்டனர்.
Related Tags :
Next Story