மாவட்ட செய்திகள்

உத்தவ் தாக்கரேயுடன் ஏக்நாத் கட்சே திடீர் சந்திப்பு - மராட்டிய அரசியலில் பரபரப்பு + "||" + With Uthav Thackeray Eknath party meeting

உத்தவ் தாக்கரேயுடன் ஏக்நாத் கட்சே திடீர் சந்திப்பு - மராட்டிய அரசியலில் பரபரப்பு

உத்தவ் தாக்கரேயுடன் ஏக்நாத் கட்சே திடீர் சந்திப்பு - மராட்டிய அரசியலில் பரபரப்பு
பாரதீய ஜனதா தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஏக்நாத் கட்சே கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஓரங்கப்பட்டு உள்ளதால் அதிருப்தியில் இருந்து வருகிறார்.
மும்பை,

தொடர்ந்து கட்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்டால் தான் வேறு வழியை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறி பரபரப்பை உண்டாக்கிய அவர் நேற்றுமுன்தினம் பாரதீய ஜனதா மூத்த தலைவர்களை சந்திப்பதற்காக டெல்லி சென்றார். ஆனால் அங்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார். இந்த நிலையில், ஏக்நாத் கட்சே நேற்று திடீரென சட்டசபை கட்டிடத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். இருவரும் சுமார் 40 நிமிடங்கள் வரை பேசி கொண்டிருந்தனர்.


பின்னர் ஏக்நாத் கட்சே நிருபர்களிடம் கூறுகையில், “ஜல்காவில் செயல்படுத்தாமல் இருக்கும் ரூ.6 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினேன். இது தொடர்பாக தான் சரத்பவாரையும் சந்தித்தேன். கட்சி மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பாரதீய ஜனதாவில் இருந்து விலகுவது குறித்து முடிவு எதுவும் எடுக்கவில்லை” என்றார்.

பாரதீய ஜனதாவில் அதிருப்தியில் உள்ள ஏக்நாத் கட்சே, எதிர் அணியை சேர்ந்த சரத்பவார், உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசியது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...