மாவட்ட செய்திகள்

சின்னசேலத்தில், விஷம் குடித்து பெண் தற்கொலை - தாயார் திட்டியதால் விபரீத முடிவு + "||" + In cinnaselam, Drinking poison Female suicide

சின்னசேலத்தில், விஷம் குடித்து பெண் தற்கொலை - தாயார் திட்டியதால் விபரீத முடிவு

சின்னசேலத்தில், விஷம் குடித்து பெண் தற்கொலை - தாயார் திட்டியதால் விபரீத முடிவு
சின்னசேலத்தில் தாயார் திட்டியதால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி அருகே விளம்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி கலையரசி (வயது 20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கோபமடைந்த கலையரசி தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு சின்னசேலத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று வசித்து வந்தார்.

மேலும் அங்கு கூலி வேலைக்கும் சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கலையரசி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

இதைபார்த்த அவருடைய தாயார், கலையரசியிடம் ஏன்? இப்படி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாய் எனக் கேட்டு திட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த அவர் விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கலையரசி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேப்பந்தட்டை அருகே, திருமணமான 6 மாதத்தில் பெண் தற்கொலை - வருவாய் கோட்டாட்சியர் விசாரணை
வேப்பந்தட்டை அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
2. ஆத்தூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
ஆத்தூர் அருகே குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. பரப்பாடி அருகே, வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை
பரப்பாடி அருகே வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
4. உப்பிலியபுரம் அருகே தண்ணீர் தொட்டியில் இருந்த விஷம் கலந்த நீரை குடித்து 3 பசுக்கள் செத்தன
உப்பிலியபுரம் அருகே தண்ணீர் தொட்டியில் இருந்த விஷம் கலந்த நீரை குடித்து 3 பசுக்கள் செத்தன. அரசியல் காழ்ப்புணர்ச்சியில் விஷம் கலக்கப்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. சுசீந்திரம் அருகே, கடன் தொல்லையால் பெண் தற்கொலை
சுசீந்திரம் அருகே கடன் தொல்லையால் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-