மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு பெங்களூருவில் இருந்து 13 டன் பல்லாரி கொண்டு வரப்பட்டது - கிலோ ரூ.70-க்கு விற்பனை + "||" + Kovilpatti Market From Bangalore 13 tons of Ballari was brought

கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு பெங்களூருவில் இருந்து 13 டன் பல்லாரி கொண்டு வரப்பட்டது - கிலோ ரூ.70-க்கு விற்பனை

கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு பெங்களூருவில் இருந்து 13 டன் பல்லாரி கொண்டு வரப்பட்டது - கிலோ ரூ.70-க்கு விற்பனை
கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு பெங்களூருவில் இருந்து 13 டன் பல்லாரி கொண்டு வரப்பட்டது. அவை சில்லறை விலையில் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோவில்பட்டி, 

தொடர் மழை காரணமாக பல்லாரி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் வரத்து குறைந்ததால், அவற்றின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்லாரி, சின்ன வெங்காயம் ஆகியவை ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு, பெங்களூருவில் இருந்து ஒரு லாரியில் 13 டன் பல்லாரி ஏற்றி கொண்டு வரப்பட்டது. அந்த லாரி நேற்று அதிகாலையில் கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு வந்ததும், ஏராளமான வியாபாரிகள் ஆர்வமுடன் பல்லாரி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை வாங்கி சென்றனர்.

இதையடுத்து கோவில்பட்டி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரையிலும் விற்பனை செய்யப்பட்ட பல்லாரி பழையது நேற்று ரூ.60 முதல் ரூ.90 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விலையில் பல்லாரி ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு ஒட்டன்சத்திரம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் நேற்று ரூ.50 முதல் ரூ.100 வரையிலும் தரம் வாரியாக விற்பனை செய்யப்பட்டது.

அதாவது ஒட்டன்சத்திரம் சின்ன வெங்காயம் புதியது ஒரு கிலோ ரூ.85 முதல் 90 வரையிலும், விளாத்திகுளம் சின்ன வெங்காயம் காய்ந்தது ஒரு கிலோ ரூ.100-க்கும், 2-வது ரகம் ரூ.70-க்கும், ஈரப்பதமானது ரூ.50 முதல் ரூ.60 வரையிலும் என மொத்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விலையில் ஒரு கிலோவுக்கு ரூ.10 அதிகமாக சேர்த்து விற்பனை செய்யப்பட்டது. அவற்றை வியாபாரிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

இதுகுறித்து கோவில்பட்டி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவரும், வெங்காயம் மொத்த வியாபாரியுமான முத்துராஜ் கூறுகையில், கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு பெங்களூருவில் இருந்து பல்லாரி மற்றும் ஒட்டன்சத்திரம், விளாத்திகுளம் பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்ததால், அவற்றின் விலை சற்று குறைந்து உள்ளது. அடுத்த மாதத்தில் (ஜனவரி) இருந்து மராட்டிய மாநிலத்தில் இருந்தும் கோவில்பட்டி மார்க்கெட்டுக்கு பல்லாரி விற்பனைக்காக கொண்டு வரப்படும். எனவே இனிவரும் நாட்களில் பல்லாரி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை குறைந்து விடும் என்று தெரிவித்தார்.