மாவட்ட செய்திகள்

வெவ்வேறு விபத்துகளில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலி + "||" + Truck accident kills two, including lorry driver

வெவ்வேறு விபத்துகளில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர்.
ராயக்கோட்டை,

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பாண்டு (வயது 35). டிப்பர் லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வழியாக பாலக்கோடு நோக்கி, எம்.சாண்ட் மணல் ஏற்றி கொண்டு, டிப்பர் லாரியில் சென்று கொண்டிருந்தார்.


ராயக்கோட்டை அடுத்த உடையாண்டஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாண்டு, படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் சாவு

ஓசூர்-கிரு‌‌ஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்தலப்பள்ளி பகுதியில், நேற்று இரவு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, வாலிபர் மீது மோதியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலி டெல்டாவில் 331 பேருக்கு தொற்று
தஞ்சை, நாகையில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியானார்கள். டெல்டாவில் 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. ராஜஸ்தானில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி
ராஜஸ்தானில் முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலியானார்.
3. மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்: காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி பலி
வேலாயுதம்பாளையம் அருகே தந்தைக்கு சாப்பாடு கொடுக்க மோட்டார் சைக்கிளில் சென்ற காகித ஆலை ஒப்பந்த தொழிலாளி கார் மோதி பரிதாபமாக இறந்தார்.
4. மங்களமேடு அருகே பரிதாபம்: கார் மரத்தில் மோதியதில் 2 பேர் பலி
மங்களமேடு அருகே கார் மரத்தில் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
5. தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 6 பேர் பலி
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர்.