தண்ணீர் இல்லாத வில்வராயநல்லூர் ஏரி


தண்ணீர் இல்லாத வில்வராயநல்லூர் ஏரி
x
தினத்தந்தி 11 Dec 2019 10:00 PM GMT (Updated: 2019-12-12T02:00:03+05:30)

செங்கல்பட்டு மாவட்டம் வில்வராய நல்லூர் ஊராட்சிக்கு சொந்தமான ஏரியில் பருவ மழை பெய்தும் தண்ணீர் இல்லாமல் உள்ளது.

மதுராந்தகம், 

செங்கல்பட்டு மாவட்டம் வில்வராய நல்லூர் ஊராட்சிக்கு சொந்தமான ஏரியில் பருவ மழை பெய்தும் நீர் வரவில்லை. இதனால் ஏரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் காணப்படுகிறது. சரிவர கால்வாய் அமைக்கப்படாததால் இந்த ஏரிக்கு நீர்வரத்து சரி வர வரவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பகுதில் உள்ள விவசாய நிலங்களில் பலரும் விவசாயம் செய்து வருகின்றனர். ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டு மழை பெய்தும் ஏரிக்கு தண்ணீர் வரத்து முழுவதும் தடைபட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க வேண்டும்.

ஏரிக்கு நீர் வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story