மாவட்ட செய்திகள்

தேசிய குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் - சரத்குமார் பேட்டி + "||" + In the National Citizenship Act Change must be made - Interview with Sarathkumar

தேசிய குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் - சரத்குமார் பேட்டி

தேசிய குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் - சரத்குமார் பேட்டி
தேசிய குடியுரிமை சட்டத்தில் சில மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று சரத்குமார் கூறினார்.
சிவகாசி,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று காலை சிவகாசியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் உள்ளது. எங்களுக்கு தேவையான இடங்கள் குறித்து அ.தி.மு.க. தலைமையிடம் கேட்டுள்ளோம். அந்தந்த பகுதி மாவட்ட செயலாளர்களிடம் பேசி தேவையான இடங்களை கேட்டு பெற்று போட்டியிட உள்ளோம்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க. தயங்குவதாக நான் நினைக்கிறேன். அ.தி.மு.க. தலைமையில் உள்ள கூட்டணியில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அ.தி. மு.க. கூட்டணியில் உள்ள பல கட்சிகள் தங்களுக்கு எத்தனை சதவீத இடங்கள் தேவை என கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து இறுதி முடிவை அ.தி.மு.க.தான் எடுக்க வேண்டும்.

இந்தியா ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டும் என்றாலும் அரசியலுக்கு வரலாம். புதிதாக கட்சி தொடங்கலாம். யார் அரசியலில் ஈடுபட்டாலும் நான் அவர்களை வரவேற்பேன். குறிப்பாக இளைஞர்கள் அதிகஅளவில் அரசியலில் ஈடுபட வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது. ஆனால் அவரிடம் யார் ஆதரவு கேட்டது என்று தெரியவில்லை. அதை முதலில் அவர் கூறட்டும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். அந்த மாற்றங்கள் என்ன என்று விரைவில் அறிக்கையாக வெளியிட உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து வெம்பக்கோட்டை அருகே உள்ள மேலாண்மறைநாட்டில் உள்ள தொடக்கப்பள்ளிக்கு சரத்குமார் வந்தார். ஆசிரியர், மாணவ, மனைவிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்பாண்டி, மாவட்ட துணை செயலாளர் சுந்தர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.