மாவட்ட செய்திகள்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை எரித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம் + "||" + State college student-student demonstration burning copy of Citizenship Bill

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை எரித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை எரித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை எரித்து திரு.வி.க. அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இதன் தொடர்ச்சியாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் கவிதா, கல்லூரி நிர்வாகிகள் தீனா, மணி, சுர்ஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நகல் எரிப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை தீவைத்து எரித்தனர்.

திருத்துறைப்பூண்டி

இதேபோல் மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். இதனால் 1 மணி நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் கரியை பூசி நூதன ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து ஓ.பி.சி., டி.என்.டி. சமூகங்கள் நல அமைப்பினர் உடலில் கரியை பூசி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
போதுமான அளவு கொள்முதல் நிலையங்கள் திறக்க வலியுறுத்தி தஞ்சையில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல அலுவலகம் முன்பு நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
3. திருவண்ணாமலையில் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக இந்து மகாசபா ஆர்ப்பாட்டம் குமரியில் 200 இடங்களில் நடந்தது
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அகில பாரத இந்து மகா சபா சார்பில் நேற்று குமரி மாவட்டத்தில் 200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
5. மன்னார்குடியில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடியில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.