கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் கலெக்டரிடம் மனு


கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 12 Dec 2019 10:45 PM GMT (Updated: 12 Dec 2019 6:31 PM GMT)

கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று ஆதிதிராவிடர் மக்களின் வாழ்வாதார கூட்டு இயக்கத்தினர் நாகை கலெக்டரிடம் மனு அளித்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை, கீழையூர், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் ஆகிய தாலுகாக்களை சுற்றியுள்ள கிராமங்களில் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் உள்ளனர். கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த ஆதிதிராவிடர் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். புயலால் முழு மற்றும் பகுதி அளவு சேதம் அடைந்து வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும்.

பேரிடர் பாதுகாப்பு மையம்

பேரிடர் காலங்களில் நிவாரண முகாம்களாக பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாய கூடங்களில் தங்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே பேரிடர் பாதுகாப்பு மையத்தை கட்டித்தரவேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அடிப்படை மற்றும் சுகாதார வசதிகள் செய்து தரவேண்டும். புயலால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த கிராமப்புற கூலி தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பிற்கான திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story