மாவட்ட செய்திகள்

திருவாரூரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து முதியவர் சாவு + "||" + The roof of the house in Thiruvarur collapsed and the old man died

திருவாரூரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து முதியவர் சாவு

திருவாரூரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து முதியவர் சாவு
திருவாரூரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
திருவாரூர்,

திருவாரூரில் அழகிரி நகரில் பெரும்பாலானோரின் வீடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளாக இருந்து வருகிறது. தற்போது அனைத்து வீடுகளும் சேதமடைந்த நிலையில் உள்ளன. இ்ந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில் கூலி தொழிலாளி மாரியப்பன் (வயது 70) என்பவர் தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து மாரியப்பன் மீது விழுந்தது.


முதியவர் சாவு

அப்போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாலச்சோப்ராவில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது 22 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
நாலாச்சோப்ராவில் 4 மாடி கட்டிடம் நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. அதில் வசித்து வந்த 22 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
2. ராய்காட் மாவட்டத்தில் துயர சம்பவம் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது 59 பேர் உயிரோடு புதைந்தனர்
ராய்காட் மாவட்டத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 59 பேர் உயிரோடு புதைந்தனர். அவர்களை மீட்கும் பணி விடிய, விடிய நடந்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...