மாவட்ட செய்திகள்

பூதலூர் ஒன்றியத்தில் 24 ஆயிரம் ஏக்கர் சம்பா-தாளடி சாகுபடி களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம் + "||" + Farmers intensify work on 24 thousand acres of samba-taladi cultivation

பூதலூர் ஒன்றியத்தில் 24 ஆயிரம் ஏக்கர் சம்பா-தாளடி சாகுபடி களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

பூதலூர் ஒன்றியத்தில் 24 ஆயிரம் ஏக்கர் சம்பா-தாளடி சாகுபடி களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்
பூதலூர் ஒன்றியத்தில் 24 ஆயிரம் ஏக்கரில் சம்பா-தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருக்காட்டுப்பள்ளி,

மேட்டூர் அணையில் இருந்து போதுமான அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், தொடர்ந்து பெய்த மழையினாலும் பூதலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளன.

தொடர்ந்து பெய்த மழையினால் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தற்போது பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் அடித்து வருகிறது. ஆதலால் தண்ணீர் முற்றிலும் வடிந்து விட்டது. இதனால் விவசாயிகள் களை எடுத்தல், மேலுரம் இடுதல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


மருந்து தெளிக்கும் பணி

பூதலூர் ஒன்றியத்தில் 24 ஆயிரத்து 532 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூதலூர் வட்டாரத்தில் நெற்பயிர்கள் நன்றாக உள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள் கூறினர்.

இருப்பினும் ஒரு சில இடங்களில் பயிரில் பூச்சி தாக்குதல் தென்படுவதால் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மழைநீர் சூழ்ந்ததால் வாடிய தக்காளி பயிர்கள் வருண பகவான் கருணை காட்டினாலும் மகிழ்ச்சியடையாத விவசாயிகள்
திண்டுக்கல் அருகே, மழைநீர் சூழ்ந்ததால் தக்காளி பயிர்கள் வாடின. இதனால் வருண பகவான் கருணை காட்டினாலும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை.
2. லால்குடியில் சம்பா சாகுபடியில் நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரம்
லால்குடியில் சம்பா சாகுபடியில் நாற்றங்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
3. சித்ரதுர்கா அருகே 4 ஏக்கரில் பயிரிட்ட ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல் 4 பேர் கைது
சித்ரதுர்கா அருகே 4 ஏக்கரில் பயிரிட்ட ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
4. டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இலக்கு வருகிற 31-ந் தேதிக்குள் எட்டப்படும்
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி இலக்கு வருகிற 31-ந் தேதிக்குள் எட்டப்படும் என வேளாண் இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறினார்.
5. தாராபுரம் பகுதியில் கருகல் நோயால் தக்காளி விளைச்சல் பாதிப்பு விவசாயிகள் வேதனை
தாராபுரம் பகுதியில் கருகல் நோயால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை