மாவட்ட செய்திகள்

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தற்போதைக்கு இல்லை முதல்-மந்திரி எடியூரப்பா தகவல் + "||" + Expansion of Karnataka Cabinet Not at the moment Chief-Minister Yeddyurappa Information

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தற்போதைக்கு இல்லை முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தற்போதைக்கு இல்லை முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தற்போதைக்கு இல்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் 12-ல் பா.ஜனதா வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசுக்கு முழு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது. இடைத்தேர்தலுக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.


இடைத்தேர்தல் முடிந்த உடனேயே மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் கருதினர். ஆனால் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தற்போதைக்கு இல்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று மந்திரிசபை கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தற்போதைக்கு நடைபெறாது. எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் இருக்கிறார். அதனால் நான் 3, 4 நாட்களுக்கு பிறகு, டெல்லி சென்று அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். அமித்ஷா அனுமதி வழங்கிய பிறகே மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும். இப்போது நான் டெல்லி செல்லவில்லை. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.