ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Dec 2019 10:15 PM GMT (Updated: 12 Dec 2019 8:28 PM GMT)

திங்கள்சந்தை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

அழகியமண்டபம்,

திங்கள்சந்தை அருகே நெட்டாங்கோடு பகுதிைய ேசர்ந்தவர் முருகேசன், தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி(வயது 60). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று காலையில் ராஜேஸ்வரி மருந்து வாங்குவதற்காக நாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். இதற்காக மொட்டவிளை பஸ்நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

நகை மாயம்

அந்தபஸ் பரசேரியை கடந்து தோட்டியோடு பகுதியில் வந்த போது, ராஜேஸ்வரி தன் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து கதறி அழுதபடி கண்டக்டரிடம் தெரிவித்தார். தொடர்ந்து,பஸ் முழுவதும் தேடியும்நகைகிடைக்கவில்லை.பஸ்சில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகையை திருடி சென்றதாக தெரிகிறது.

இதுகுறித்து ராஜேஸ்வரி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

இதற்காக மொட்டவிளை, பேயன்குழி, பரசேரி போன்ற பஸ் நிறுத்தங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி நகையை திருடிய நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலியை திருடிச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story