அரூர் அருகே 4 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டி அகற்றும் பணி தீவிரம்


அரூர் அருகே 4 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டி அகற்றும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:30 PM GMT (Updated: 12 Dec 2019 9:35 PM GMT)

அரூர் அருகே 4 வழிச்சாலைக்காக மரங்களை வெட்டி அகற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

அரூர்,

சேலம் அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் அரூர் வழியாக வாணியம்பாடி வரை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுகிறது.

இதில், சேலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதற்கட்டமாக ஏ.பள்ளிப்பட்டியில் இருந்து ஊத்தங்கரை வரை 44 கி.மீ. தொலைவிற்கு 70 சாலை வளைவுகளை நேராக்கவும், பெரியது முதல் சிறியது வரை 80 பாலங்கள் அமைக்கவும் ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டிற்குள் இப்பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

பணிகள் தீவிரம்

இதற்காக சாலையோரம் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். வெட்டப்பட்ட மரங்களை லாரிகளில் ஏற்றி கொண்டு சென்றனர். கடந்த 2 நாட்களாக புதுப்பட்டி, இருளப்பட்டி ஆகிய இடங்களில் மரங்களை வெட்டும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதேபோல் அரூர்-ஊத்தங்கரை சாலையில் இருபுறமும் முட்செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியும் நடந்து வருகிறது.


Next Story