மாவட்ட செய்திகள்

திருமண ஆசைகாட்டி தொழில் அதிபரிடம் பணம் பறித்த இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் + "||" + Wedding wishlist Money Plucked young lady

திருமண ஆசைகாட்டி தொழில் அதிபரிடம் பணம் பறித்த இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

திருமண ஆசைகாட்டி தொழில் அதிபரிடம் பணம் பறித்த இளம்பெண்  கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
திருமணம் செய்வதாக ஆசைகாட்டி தன்னிடம் பணம் பறித்து மோசடி செய்ததாக இளம்பெண் மீது தொழில் அதிபர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு கொடுத்துள்ளார்.
சென்னை,

சென்னை பள்ளிக்கரணை ஐ.ஐ.டி. காலனியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 39). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நான் பல்வேறு தொழில்நிறுவனங் களை நடத்தி வருகிறேன். எனது மனைவி இறந்து விட்டார். எனது 2 குழந்தைகளும் மாமனார் வீட்டில் வளர்கிறார்கள்.

இந்தநிலையில் என்னுடைய நிறுவனத்தில் பயிற்சிக்காக சேர்ந்த இளம்பெண் ஒருவர் அன்பாக என்னிடம் பழகினார். அவருக்கு 38 வயது என்று தெரிவித்தார். திருமணமாகவில்லை என்றும் கூறினார்.

பாச மழை பொழிந்தார்

ஆசையாக 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதாக தெரிவித்தார். அவர் என்னோடு நெருக்கமாக பழகினார். பாச மழையை பொழிந்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார்.

அவரது அன்பான அக்கறையை பார்த்து நானும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்து, முதலில் 5 பவுன் தங்க சங்கிலியை பரிசாக கொடுத்தேன். இந்தநிலையில் ரூ.7 லட்சம் கடன் இருப்பதாகவும், அதற்கு வட்டி கட்ட பணம் தேவைப்படுவதாகவும் கூறி என்னிடம் பணம் வாங்கினார்.

நம்பிக்கை மோசடி

நாளடைவில் அந்த பெண் மோசடி பெண் என்று தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்து அதுபற்றி கேட்டபோது, என்னை ஆபாசமாக திட்டி பூரிக்கட்டையால் அடிக்க முயன்றார்.

திருமண ஆசைகாட்டி என்னிடம் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்ட அந்த பெண்ணால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அஞ்சுகிறேன். எனக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, அந்த பெண்ணின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை