தொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு


தொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை - புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 Dec 2019 11:00 PM GMT (Updated: 13 Dec 2019 7:48 PM GMT)

தொழிலாளி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு நீதிபதி ராஜலட்சுமி நேற்று தீர்ப்பு கூறினார்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி அருகே உள்ள செங்கலூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 37). கூலி தொழிலாளியான இவர் கடந்த 29.10.2016-அன்று கிள்ளுக்கோட்டையை சேர்ந்த சின்னதுரை (34), பெரியராசு (40), மூர்த்தி (40) மற்றும் கந்தவேல் (21) ஆகிய 4 பேருடன் சேர்ந்து, அந்த பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு மோதலாகியது. இதில் சின்னதுரை, பெரியராசு, மூர்த்தி, கந்தவேல் ஆகியோர் சேர்ந்து கார்த்திகேயனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னதுரை, ெபரியராசு, மூர்த்தி, கந்தவேல் ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது அவர் கார்த்திகேயனை கொலை செய்த குற்றத்திற்காக சின்னதுரை, பெரியராசு, மூர்த்தி மற்றும் கந்தவேல் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story