கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் கேட்டால் நடவடிக்கை - ஆணையாளர் எச்சரிக்கை
கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் கேட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடையநல்லூர்,
கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
கடையநல்லூர் நகராட்சியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக சுமார் 13 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணியில் தவறுகள் நடைபெறாத வகையில் இதற்காக இளநிலை பொறியாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
புதிய குடிநீர் இணைப்பு கொடுக்க ரூ.6 ஆயிரம் கட்டணம் ஆகும். இதுதவிர கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டாலோ, லஞ்சம் கேட்டாலோ 94862 88022 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இடைத்தரகர்கள் யாரையும் நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story