மாவட்டம் முழுவதும் ஒரே நாளில், 3 ஆயிரத்து 89 பேர் வேட்புமனு தாக்கல்


மாவட்டம் முழுவதும் ஒரே நாளில், 3 ஆயிரத்து 89 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:30 PM GMT (Updated: 13 Dec 2019 8:31 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 3 ஆயிரத்து 89 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 333 பதவிகளுக்கு வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந்தேதி தொடங்கியது. ஆனால், தொடக்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.

இதற்கிடையே நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. இதனால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஏராளமானோர் படையெடுத்தனர். பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களுடைய ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். திண்டுக்கல் உள்பட அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களின் முன்பும் கூட்டம் அலைமோதியது.

மேலும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 22 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 235 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 545 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 ஆயிரத்து 287 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 3 ஆயிரத்து 89 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 

Next Story