மாவட்ட செய்திகள்

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கைதானவருக்கு விரைவில் தண்டனை வழங்க கோரி போராட்டம் + "||" + 6-year-old girl raped To arrest Struggling for punishment soon

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கைதானவருக்கு விரைவில் தண்டனை வழங்க கோரி போராட்டம்

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கைதானவருக்கு விரைவில் தண்டனை வழங்க கோரி போராட்டம்
பெலகாவி அருகே 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக கைதான வாலிபருக்கு விரைவில் தண்டனை வழங்க வலியுறுத்தி நேற்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெலகாவி,

பெலகாவி மாவட்டம் காகதி அருகே உள்ள கடோலி கிராமத்தை சேர்ந்தவள் 6 வயது சிறுமி. இவள் கடந்த 11-ந் தேதி வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்தாள். இந்த வேளையில் அதே கிராமத்தை சேர்ந்த சுனில் பாலநாயக் (வயது 26) என்பவர் சிறுமியை விளையாட அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.


இதுகுறித்த புகாரின் பேரில் காகதி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில் பாலநாயக்கை கைது செய்தனர். நேற்று முன்தினம் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பெலகாவி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்தும், சுனில் பாலநாயக்கின் தந்தையை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், கைதான சுனில் பாலநாயக்கிற்கு விரைவில் தண்டனை வழங்க கோரியும் நேற்று கடோலி கிராமத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று கிராமத்தில் உள்ள ஓட்டல்கள், மளிகைக்கடைகள் உள்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன. மேலும் ஆஸ்பத்திரி, மருந்துக்கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும் பலாத்கார வழக்கை விரைந்து விசாரணை நடத்தி விரைவில் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் பெலகாவி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நேற்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. பாலியல் பலாத்காரத்தின் போது வலிப்பு நோயால் பாதிக்கபட்டதைப்போல் உணர்ந்தேன் நடிகை கண்ணீர் மல்க சாட்சி
ஹார்வி வெயின்ஸ்டீனால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் போது வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை போன்று உணர்ந்தேன என நடிகை அன்ன பெல்லா கண்ணீர் மல்க கோர்ட்டில் கூறினார்.
2. சிவகாசி அருகே, பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வழக்கில் அசாம் வாலிபர் கைது
சிவகாசி அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஆட்டோ டிரைவர் கைது - உடந்தையாக இருந்த மனைவியும் சிக்கினார்
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ டிரைவரையும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவியான பள்ளி ஆசிரியையும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
4. 6 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற உறவினருக்கு தூக்கு தண்டனை: உத்தரபிரதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
6 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற உறவினருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரபிரதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
5. என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட 4 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை: தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவு
தெலுங்கானாவில் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட 4 பேர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.