மாவட்ட செய்திகள்

குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க.வினர் 287 பேர் கைது + "||" + 287 people arrested for demonstrating DMK

குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க.வினர் 287 பேர் கைது

குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு  ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க.வினர் 287 பேர் கைது
குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்த தி.மு.க.வினர் 287 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில், நேற்று காலை காஞ்சீபுரம் காந்திரோடு, பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல்மாலிக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. நிர்வாகிகள் சி.வி.எம்.அ.சேகர், பி.எம்.குமார், சிகாமணி, ரவிக்குமார், அபுசாலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை தமிழர்களையும்், முஸ்லிம்களையும் வஞ்சிக்கும் பா.ஜ.க., மற்றும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும், குடியுரிமை சட்ட நகலை கிழித்தெறிந்து கோஷங் களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சின்ன காஞ்சீபுரம் போலீசார் விரைந்து சென்று, அப்துல்மாலிக் உள்பட 35 பேரை கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.