மாவட்ட செய்திகள்

விருத்தாசலத்தில், குடியுரிமை திருத்த மசோதா நகலை எரித்து தி.மு.க. வினர் போராட்டம் - போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு + "||" + In Circumstances, Citizenship Amendment DMK burns a copy of the bill Winer struggles

விருத்தாசலத்தில், குடியுரிமை திருத்த மசோதா நகலை எரித்து தி.மு.க. வினர் போராட்டம் - போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

விருத்தாசலத்தில், குடியுரிமை திருத்த மசோதா நகலை எரித்து தி.மு.க. வினர் போராட்டம் - போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
விருத்தாசலத்தில் குடியுரிமை திருத்த மசோதா நகலை எரித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம், 

மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் குடியுரிமை திருத்த மசோதவை கொண்டு வந்தது. கடும் எதிர்ப்புகளை மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

அந்த வகையில் நேற்று தமிழகத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. அதன்படி விருத்தாசலத்தில் கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில், குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதை கண்டித்து, சட்ட திருத்த மசோதா நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசன், இளைஞரணி துணை அமைப்பாளர் கணே‌‌ஷ்குமார், துரைராஜ், பாண்டுரங்கன், ராஜே‌‌ஷ், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மத்திய அரசை கண்டித்து அவர்கள் கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து குடியுரிமை திருத்த மசோதாவை தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

இதில் மாவட்ட பொருளாளர் பாவாடை கோவிந்தசாமி, மாவட்ட துணை செயலாளர் அரங்க பாலகிரு‌‌ஷ்ணன், ஒன்றிய செயலாளர் கனககோவிந்தசாமி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் பொன் கணே‌‌ஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்ம மணிவேல், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அருள் குமார், வழக்கறிஞர் ரவிச்சந்திரன், நகர துணை செயலாளர் ராமு, குரு சரஸ்வதி, நம்பிராஜன், ஆட்டோ பாண்டியன், இளைஞரணி ராஜராஜசோழன், நாராயணசாமி, சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை