மாவட்ட செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே விளைநிலத்தில் நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது + "||" + Near Ulundurpet In the resulting land Country guns Hiding Five arrested

உளுந்தூர்பேட்டை அருகே விளைநிலத்தில் நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே விளைநிலத்தில் நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த 5 பேர் கைது
உளுந்தூர்பேட்டை அருகே விளை நிலத்தில் நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூரில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடு உள்ளது. இங்கு மான், காட்டுப்பன்றி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகளை சமூக விரோதிகள் சிலர் நாட்டுத்துப்பாக்கி மூலம் வேட்டையாடி வருவது தொடர் கதையாக உள்ளது. இதனால் போலீசார் அவ்வப்போது வனப்பகுதி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சோதனை நடத்தி, பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் எறையூரில் உள்ள ஒருவரது விளை நிலத்தில் நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நேற்று உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் போலீசார் எறையூருக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள விளை நிலங்களில் சோதனை நடத்தினர். அப்போது விளை நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அந்தோணி (வயது 25), பு‌‌ஷ்பராஜ்(25), லியோ பிரகா‌‌ஷ்(22), ஜோசப் ராஜ்(22), ஜான் ரோசாரியோ(25) ஆகியோர் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அபராதம் : சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபர் கைது
மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அபராதம் விதித்த சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி டிராவல்ஸ் உரிமையாளர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
3. ரெயில்வே அதிகாரியின் மகனை ரூ.10 லட்சம் கேட்டு கடத்திய வாலிபர் கைது
வில்லிவாக்கம் அருகே ரெயில்வே அதிகாரியின் மகனை ரூ.10 லட்சம் கேட்டு கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
4. ஓசூர் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் பறிப்பு: சேலத்தில் கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 4 பேர் கைது
ஓசூர் ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் பறித்த கடத்தல் கும்பல் தலைவன் உள்பட 4பேரை போலீசார் சேலத்தில் கைது செய்தனர்.
5. கோவா பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் மாணவருக்கு கத்திக்குத்து; ஒருவர் கைது
கோவா பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டு மாணவரை கும்பல் ஒன்று கத்தியால் குத்திய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.