எர்ணாவூர் அருகே இரவில் மாயமான பயணிகள் நிழற்குடை பொதுமக்கள் அவதி
எர்ணாவூர் மேம்பாலம் அருகே உள்ள முல்லை நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகளின் நிழற்குடை திடீரென்று மாயமானது.
திருவொற்றியூர்,
திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் மேம்பாலம் அருகே உள்ள முல்லை நகர் பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் செலவில் நவீன பஸ்நிழற்குடை அமைக்கப்பட்டது.
இந்த நிழற்குடை கோடை மற்றும் வெயில் காலத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்து வந்த நிலையில், நிழற்குடை நேற்று திடீரென்று மாயமானது.
அப்பகுதியை சேர்ந்த மர்மநபர்கள் சிலர் இரவோடு இரவாக பஸ்நிழற்குடையை பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டதாக தெரிகிறது.
இதையறிந்த பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் சரவணன் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story