மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: அதிகபட்சமாக கடலூரில் 83.30 மில்லி மீட்டர் பதிவானது


மாவட்டம் முழுவதும் பரவலாக மழை: அதிகபட்சமாக கடலூரில் 83.30 மில்லி மீட்டர் பதிவானது
x
தினத்தந்தி 14 Dec 2019 10:00 PM GMT (Updated: 14 Dec 2019 7:31 PM GMT)

கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கடலூரில் 83.30 மில்லி மீட்டர் மழை பதிவானது.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. இருப்பினும் மாலை நேரத்தில் பனியின் தாக்கம் இருந்தது. இந்நிலையில் இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளுக்கு அருகில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்படி கடலூரில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு தொடங்கிய மழை விட்டு, விட்டு இரவு வரை பெய்தது. நள்ளிரவு 1 மணிக்கு பிறகு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழை நேற்று வரை நீடித்தது. காலை 8 மணிக்கு பலத்த மழை பெய்ததால், பள்ளிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் நனைந்தபடி சென்றனர். சிலர் குடைபிடித்தபடியும், மழை கோட்டு அணிந்தபடியும் சென்றனர். தொடர் மழையால் பள்ளிகளில் மாணவர்கள் வருகையும் குறைவாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மதியம் வரை விட்டு விட்டு பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. குடியிருப்பு பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்தது. சேத்தியாத்தோப்பு, அண்ணாமலைநகர், சிதம்பரம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமு‌‌ஷ்ணம், விருத்தாசலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. நெற்பயிர்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 83.30 மில்லி மீட்டர் மழையும், கலெக்டர் அலுவலக பகுதியில் 83.30 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 31.35 மில்லி மீட்டர் மழை பெய்தது.

மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

வடக்குத்து - 46

சேத்தியாத்தோப்பு - 43

வானமாதேவி - 38

அண்ணாமலைநகர் - 34.30

கீழசெருவாய் - 34

பெலாந்துறை - 28.20

காட்டுமன்னார்கோவில் - 28

மே.மாத்தூர் - 28

எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 27.50

சிதம்பரம் - 27

ஸ்ரீமு‌‌ஷ்ணம் - 26.20

குப்பநத்தம் - 26

லக்கூர் - 25.40

விருத்தாசலம் - 25.20

பரங்கிப்பேட்டை - 25

வேப்பூர் - 24

தொழுதூர் - 22

காட்டுமயிலூர் - 22

புவனகிரி - 21

கொத்தவாச்சேரி - 20

குறிஞ்சிப்பாடி - 19.06

லால்பேட்டை - 18.40

பண்ருட்டி - 09.00

Next Story