மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிசீட்டுகள் விற்ற 5 பேர் கைது


மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிசீட்டுகள் விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2019 10:30 PM GMT (Updated: 14 Dec 2019 8:34 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிரு‌‌ஷ்ணகிரி,

விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிசீட்டை வாங்கி ஏற்பட்ட கடனால் 3 குழந்தைகளை கொன்று விட்டு, கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்டனர். முன்னதாக அவர்கள் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிசீட்டுகள் விற்பனை நடைபெறுகிறதா? என்று கண்காணிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார். அதன் பேரில் கிரு‌‌ஷ்ணகிரி டவுன், போச்சம்பள்ளி, பர்கூர், சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை போலீசார் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

5 பேர் கைது

அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக கிரு‌‌ஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காமராஜ் (வயது 43), போச்சம்பள்ளி பாரண்டப்பள்ளி ஒட்டர் தெரு பெரியதம்பி (52), பர்கூர் கரீம் சாய்பு தெரு சாதிக் பா‌ஷா (49), திருப்பத்தூர் சாலை சாதுல்லா (47), ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் மாதேஸ்வரன் (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,700 மற்றும் 25 லாட்டரி சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story