மேலும் சில நாட்களுக்கு: மும்பையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்


மேலும் சில நாட்களுக்கு: மும்பையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 14 Dec 2019 10:15 PM GMT (Updated: 14 Dec 2019 8:48 PM GMT)

மும்பையில் மேலும் சில நாட்களுக்கு குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

மும்பையில் குளிர் காலம் தொடங்கும் முன்பே பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று முன்தினம் மும்பை புறநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 19.5 டிகிரியாக பதிவாகி இருந்தது. நகர் பகுதியில் 22 டிகிரி குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவானது. நேற்றும் மும்பையில் குளிரின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

குறிப்பாக காலை 6.45 மணிக்கு பிறகு தான் சூரியனே உதயமானது. இதனால் அதிகாலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் அவதி அடைந்தனர்.

இந்தநிலையில் மும்பையில் மேலும் சில நாட்களுக்கு குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,"வருகிற 19-ந் தேதி வரை மும்பையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். 18 டிகிரி வரை வெப்பநிலை குறையும்" என கூறப்பட்டுள்ளது. வடஇந்தியாவில் பெய்து வரும் பலத்த மழை, இமயமலை பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக பனிப்பொழிவே மும்பையில் ஏற்பட்ட வெப்பநிலை மாற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

Next Story