வெவ்வேறு வழக்கில் 2 பேருக்கு கடுங்காவல் தண்டனை கோபி கோர்ட்டு தீர்ப்பு


வெவ்வேறு வழக்கில் 2 பேருக்கு கடுங்காவல் தண்டனை கோபி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 15 Dec 2019 3:45 AM IST (Updated: 15 Dec 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

வெவ்வேறு வழக்கில் 2 பேருக்கு மொத்தம் 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கடத்தூர்,

கோபி பழையபாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயி. இவர் தனது வீட்டு முன்பு ஆட்டை கட்டி வைத்திருந்தார். இந்த ஆட்டை கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி யாரோ திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் வரப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராயர்பாளையத்தை சேர்ந்த ஷன்னி (வயது 50) என்பவரை கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பான வழக்கு கோபி 2-வது கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு் விஸ்வநாத் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட ஷன்னிக்கு 1 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.100 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் மற்றொரு வழக்கில் ேகார்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது. கோபி அருகே உள்ள மாக்கினாங்கோம்யை செட்டி தோட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (50). இவரது தோட்டத்துக்குள் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (35) என்பவர் புகுந்து சோளத்தட்டுப் போருக்கு தீ வைத்துள்ளார்.

மேலும் சுப்பிரமணியத்தின் மனைவி சாந்தி, பெரியசாமி, பொன்னுசாமி ஆகியோருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த கோபி 2-வது கூடுதல் மாஜிஸ்திேரட்டு் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. அதில் மாஜிஸ்திரேட்டு விஸ்வநாத், குற்றம்சாட்டப்பட்ட சுப்பிரமணியனுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.100 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story