திருவாடானை யூனியனில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்


திருவாடானை யூனியனில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்
x
தினத்தந்தி 14 Dec 2019 11:33 PM GMT (Updated: 14 Dec 2019 11:33 PM GMT)

திருவாடானை யூனியனில் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.

தொண்டி,

திருவாடானை யூனியனில் கலெக்டர் வீரராகவராவின் உத்தரவின் பேரில் சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் குமரகுருபரன் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தொண்டி பேரூராட்சி மற்றும் திருவாடானை யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மஸ்தூர் பணியாளர்கள் தினமும் வீடு வீடாக சென்று டெங்கு கொசு புழுக்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் ெ்டங்கு கொசுைவ ஒழிக்கும் முறைகள், பிளாஸ்டிக் பயன்பாடினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தண்ணீரில் கிருமிநாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை திருவாடானை வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி, சமுதாய சுகாதார செவிலியர் பத்மா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்தனராஜ் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது பேசிய வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைபேரில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். தனியார் மருந்து கடைகளிலோ அல்லது பயிற்சி பெறாத கிராமங்களில் உள்ள போலியான நபர்களிடமோ மாத்திரை, மருந்துகளை வாங்கி சாப்பிட கூடாது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். வீடுகளில் பொதுமக்கள் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து ஒப்படைக்க வேண்டும் என அறிவுரை கூறினார். தொடர்ந்து டெங்கு தடுப்பு குறித்த துண்டுபிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Next Story