ஆம்பூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதல் - போக்குவரத்து பாதிப்பு


ஆம்பூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2019 3:30 AM IST (Updated: 15 Dec 2019 8:17 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 லாரிகள் மோதிக்கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆம்பூர், 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நிலக்கடலை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு லாரி ஒன்று வந்தது. ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு மறுபுறம் செல்லும் சாலைக்கு சென்று அவ்வழியே வந்து கொண்டிருந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மேலும் அந்த லாரியின் பின்னே வந்து கொண்டிருந்த லாரியும் விபத்துக்குள்ளான லாரியின் பின்பக்கம் பயங்கரமாக மோதியது.

இதில் 3 லாரிகளில் இருந்த டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் என 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தேசிய நெடுஞ்சாலையில் 3 லாரிகள் மோதிக்கொண்டு சாலையில் நின்றதால் அவ்வழியே எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து போக்குவரத்து ஒழுங்குபடுத்தினர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது.

Next Story