கல்வி உதவித்தொகைக்கான திறனறிவுத்தேர்வு - 7,070 மாணவ- மாணவிகள் எழுதினர்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கல்வி உதவித்தொகைக்கான திறனறிவுத்தேர்வு நேற்று நடந்தது. 7,070 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.
வேலூர்,
அரசு மற்றும் அரசு நிதிஉதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு (திறனறிவுத்தேர்வு) நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவிகளுக்கு பிளஸ்-2 வரை மாதம் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கான திறனறிவுத் தேர்வு நேற்று நடத்தப்பட்டது.
இந்த தேர்வை எழுதுவதற்காக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 7,345 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக 6 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டிருந்தது.
காலை 9.30 மணி முதல் 11 மணி வரை அறிவுசார் மற்றும் விரிவான மொழி தேர்வும், 11.30 முதல் 1 மணிவரை படிப்பறிவு திறன் பகுதி தேர்வும் நடத்தப்பட்டது.
இதில் 7,070 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். 275 பேர் தேர்வு எழுத வரவில்லை.
வேலூர் ஈ.வெ.ரா. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story