பெயிண்டர் சாவில் திடீர் திருப்பம்: குடிபோதை தகராறில் நண்பர் அடித்துக்கொன்றது அம்பலம்
பெயிண்டர் சாவில் திடீர் திருப்பமாக குடிபோதை தகராறில் நண்பர் அடித்துக்கொன்றது அம்பலமாகி உள்ளது.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகிலுள்ள தைலாவரம் வீரபத்திரன் நகரில் அமைந்துள்ள அரசு மதுக்கடை அருகில் உள்ள கால்வாயில் கடந்த 12-ந்தேதி காலை ரத்தக்காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர் எப்படி இறந்தார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் இறந்த நபர் பூந்தமல்லி குயின் விட்டோரியா தெருவை சேர்ந்த ஜெகன் (வயது 24), பெயிண்டர் என்பது தெரியவந்தது. இதற்கிடையே ஜெகனை அடித்து கொலை செய்ததாக திருப்போரூர் அருகே உள்ள கோவளம் பகுதியை சேர்ந்த சரவணன் (29), என்பவர் சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். சரண் அடைந்த சரவணன் அளித்த தகவலின்பேரில் கூடுவாஞ்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி என்னும் ஜோசப் (27) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது ஜோசப் போலீசாரிடம் வாக்குமூலத்தில் கூறியதாவது:-
கோவளம் பகுதியை சேர்ந்த சரவணனும், இறந்துபோன ஜெகனும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் கடந்த 11-ந்தேதி இரவு கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த என்னிடம் சரவணன் வந்து நானும், என் நண்பர் ஜெகனும் பருவதமலை கோவிலுக்கு செல்கிறோம். அதற்கு பணம் குறைவாக இருப்பதால் அவருடைய செல்போனை விற்றுத்தருமாறு என்னிடம் கூறினார். உடனே நான் எனக்கு தெரிந்த ஆட்டோ டிரைவரிடம் சரவணனின் செல்போனை விற்று ரூ.1,500 பணம் வாங்கி கொடுத்தேன். பின்னர் அவர்களிடம் மது குடிக்க செல்கிறேன் செல்போன் விற்று தந்ததுக்கு ரூ.100 தருமாறு கேட்டேன். உடனே சரவணன் நான் வாங்கி தருகிறேன் என்று கூறினார். நாங்கள் 3 பேரும் தாராபுரம் அருகே உள்ள மதுக்கடைக்கு சென்றோம்.
இதைத்தொடர்ந்து மதுபாட்டில்கள் வாங்கி கொண்டு 3 பேரும் ஒன்றாக மது குடித்தோம் அப்போது நான் மது அதிகமாக குடிக்கிறேன் என்று ஜெகன் என்னை ஒருமையில் பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் பீர் பாட்டிலை எடுத்து ஜெகனின் தலையில் அடித்தேன், அப்போது சரவணனும் ஏன் நமக்கு உதவி செய்ய வந்தவரை திட்டுகிறாய் என்று கூறி அவரும் ஜெகனை பீர் பாட்டிலால் அடித்தார். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தவுடன் நாங்கள் இருவரும் பயந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம்.
இவ்வாறு போலீசாரிடம் கைது செய்யப்பட்ட ஜோசப் வாக்குமூலம் அளித்ததாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பார்த்தசாரதியை கூடுவாஞ்சேரி போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story