உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கான பாடல்கள், துண்டறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரம்
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடந்து கொண்டிருக்கும் நிலையில் வேட்பாளர்களுக்கான பாடல்கள், துண்டறிக்கைகள் தயாரிப்பு பணிகளும் தீவிரமடைந்துள்ளது.
கீரமங்கலம்,
தமிழ்நாட்டில் ஊராட்சி மன்றங்கள், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கான தேர்தல்கள் 2 கட்டங்களாக வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. சில கிராமங்களில் கிராம மக்களே வேட்பாளர்களை தேர்வு செய்து வேட்பு மனுக்கள் தாக்கல் செய்து வருகின்றனர். போட்டியின்றி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை)மாலையுடன் முடிவடைகிறது. பல கிராமங்களில் கடுமையான போட்டிகள் நடக்க உள்ளது.
பாடல்கள், துண்டறிக்கைகள்
இந்த நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு அந்த சின்னங்களை மக்களிடம் கொண்டு சென்று வாக்கு சேகரிப்பதற்கு உதவியாக கடந்த பல தேர்தல்களாக நாட்டுப்புறப்பாடல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதே போல துண்டறிக்கைகளும், சுவர் விளம்பரங்களும் செய்யப்படுகிறது.
இந்தநிலையில் தான் அச்சகம் நடத்துபவர்களும், நாட்டுப்புறப் பாடகர்களும் கிராமங்கள் தோறும் விளம்பர பதாகைகள் வைத்து குறைந்த விலையில் வண்ண துண்டறிக்கை, பாடல்கள் தயார் செய்து தருகிறோம் என்று வேட்பாளர்களை நோக்கி கேட்கிறார்கள். இதில் பலரும் முன்னதாகவே ஆர்டர் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நலிவடைந்து வரும் கலைஞர்கள்
இதுகுறித்து நாட்டுப்புறப்பாடகர்கள் கூறுகையில், நாட்டுப்புறக் கலைகள் நாளுக்கு நாள் நலிவடைந்து கலைஞர்களும் கடுமையாக வறுமையில் உள்ளனர். இப்படி தேர்தல் காலங்களில் ஒருசில வேட்பாளர்களிடம் பெறப்படும் ஆர்டர்கள் மூலம் வருமானம் பெறலாம். வேட்பாளர் பெயர், ஊர், சின்னம் பற்றிய தகவல்கள் கொடுத்துவிட்டால் நாங்களே பாடல் எழுதி இசையமைத்து பாட்டுப்பாடி சி.டி. யாக கொடுத்து விடுகிறோம். அதனால் அவர்களின் விளம்பரம் மக்களிடம் எளிமையாக சென்றடைகிறது என்றனர். அதேபோல அச்சகத்தினருக்கும் அச்சக தொழிலும் தொய்வடைந்துள்ளது. சமீப காலமாக பிளக்ஸ் தடை செய்யப்பட்டுள்ளதால் வீட்டுக்கு வீடு கொடுக்கும் துண்டு சீட்டுகள் அச்சடிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்கின்றனர்.

Related Tags :
Next Story