தென்காசியில் தடையை மீறி த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தென்காசியில் தடையை மீறி த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2019 4:00 AM IST (Updated: 16 Dec 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை கண்டித்து தென்காசியில் நேற்று த.மு.மு.க.வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தென்காசி, 

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதை கண்டித்து தென்காசியில் நேற்று த.மு.மு.க.வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க. மாவட்ட தலைவர் முகமது யாகூப் தலைமை தாங்கினார். ம.ம.க. மாவட்ட செயலாளர் ப‌ஷீர் ஒலி, துணைச் செயலாளர்கள் செய்யது அலி, அப்துல்காதர், பாஸித், ஷேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாநில செயலாளர் மைதீன்சேட்கான், மாவட்ட செயலாளர் அகமது ‌ஷா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் சர்தார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் சித்திக் ஆகியோர் பேசினார்கள். மேலும் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை விதித்து இருந்தனர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 43 பேரை தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

Next Story