மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் பூஜை நேரங்கள் மாற்றம்


மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் பூஜை நேரங்கள் மாற்றம்
x
தினத்தந்தி 16 Dec 2019 3:45 AM IST (Updated: 16 Dec 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் நடைதிறப்பு, பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருச்செந்தூர், 

தமிழ் மாதமான மார்கழி நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந் தேதி நிறைவு பெறுகிறது. மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை முதல் நடை திறப்பு, பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு அபிஷேகம், இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனைக்கு பின்னர் கோவில் நடை சாத்தப்படும்.

மேலும் ஜனவரி 1-ந் தேதி (புதன்கிழமை) ஆங்கில வருடப்பிறப்பு மற்றும் ஜனவரி 15-ந் தேதி (புதன்கிழமை) தை பொங்கல் திருநாளை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். அதேபோல் ஜனவரி 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 2 மணிக்கு திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story