முதல்-மந்திரியின் மாதோஸ்ரீ் இல்லம் முன்பு பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு


முதல்-மந்திரியின் மாதோஸ்ரீ் இல்லம் முன்பு பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Dec 2019 4:15 AM IST (Updated: 16 Dec 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

பாந்திராவில் முதல்-மந்திரியின் இல்லமான மாதோஸ்ரீ முன்பு பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உறுதி அளித்தார்.

மும்பை, 

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பி.எம்.சி. வங்கியில் ரூ.4,355 கோடி அளவுக்கு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் மாதம் அந்த வங்கியின் செயல்பாடுகளை 6 மாதத்திற்கு முடக்கியது. இந்த முறைகேடு தொடர்பாக மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து உள்ளன. இதுவரை இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால், அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை எடுக்க முடியாமல் கண்ணீருடன் பரிதவித்து வருகின்ற னர். பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டு உள்ள கட் டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி அவர்கள் போராட் டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் சுமார் 500 பேர் நேற்று காலை பாந்திரா- குர்லா காம்ப்ளக்சில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் திடீரென அங்கிருந்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்லம் நோக்கி பேரணியாக சென்றனர். மாதோஸ்ரீ இல்லம் முன் திரண்ட அவர்கள் ரிசர்வ் வங்கிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

தங்களை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சந்திக்க வேண்டும் என முழக்க மிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்கள் உள்பட போராட்டக்காரர்கள் சுமார் 50 பேரை பிடித்து கேர்வாடி மற்றும் பி.கே.சி. போலீஸ் நிலையங்களுக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே, பி.எம்.சி. வாடிக்கையாளர்களை தனது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, பி.எம்.சி. வங்கி பிரச்சினையில் வாடிக்கையாளர்களுக்கு நீதி கிடைப்பதற்கு தனது தலைமையிலான அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என உறுதி அளித்தார்.

Next Story