சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 16 Dec 2019 3:00 AM IST (Updated: 16 Dec 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை,

கோவை மாவட்டத்தை சேர்ந்த 14வயது சிறுமியைகடந்த 3 மாதங்களுக்கு முன்பு சங்கர் (வயது 25) என்பவர் பாலியல் பலாத்காரம்செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்தபுகாரின்பேரில்போலீசார்போக்சோவில்வழக்குப்பதிவுசெய்துசங்கரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்துஅந்த சிறுமியைபாதுகாக்கும்பொருட்டுஅவரதுபெற்றோர் கோவையில்உள்ள சிறுமியின்பெரியம்மா வீட்டில் தங்க வைத்தனர். அங்கு அடைக்கலமாகி 3மாதங்களாக தங்கிஇருந்த சிறுமியை கடந்த 12-ந்தேதி வினேத்குமார்(21) என்ற மற்றொரு வாலிபர் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம்செய்ததாக தெரிகிறது.

இதற்கிடையே சிறுமியை காணவில்லை என்று அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.இந்த சம்பவம்குறித்து தகவல் அறிந்தவினோத்குமார், சிறுமியை திருமணம்செய்து கொண்டு அவளுடன் சேர்ந்துவாழ்வதாக கூறி கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் சிறுமியுடன் தஞ்சம் அடைந்தார். ஆனால்சிறுமியை திருமணம்செய்வது சட்டப்படி குற்றம் என்பதால்வினோத்குமார்மீதுபோக்சோசட்டத்தில்வழக்குப்பதிவுசெய்து அவரைபோலீசார்கைது செய்தனர்.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.

Next Story