தா.பேட்டை அருகே, 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு
தா.பேட்டை அருகே 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வரலாற்றாய்வு மைய இயக்குனர் கலைக்கோவன் கூறியதாவது:-
தா.பேட்டை,
தா.பேட்டை அருகே பாப்பாபட்டியில் கண்ெடடுக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள சிற்பங்களில் ஒன்று படம் எடுத்தவாறு நெளியும் பாம்பை காட்சிப் படுத்துவதாகவும், மற்றொன்று 2 பாம்புகளின் பிணைப்பை காட்டுவதாகவும் உள்ளது. பாம்புகளின் உடல் பிணைப்பால் உருவாகியிருக்கும் இரு வளையங்களில் மேலே லிங்கதிருமேனியும், கீழ் வளையத்தில் மலர் பதக்கத்தையும் சிற்பி செதுக்கி உள்ளார்.
இதை உருவாக்கியவர் அய்யண்ணன் என்பதை சிற்பத்தின் கீழே உள்ள கல்வெட்டுப் பொறிப்பு தெளிவாக்குகிறது. 2 பாதங்கள் செதுக்கப்பட்ட நிலையில் உள்ள பெரும்பாறை ஒன்றின் கீழ் பகுதியை நன்கு செதுக்கி தளத்தை சமன்படுத்தி 14 வரிகள் உள்ள தமிழ் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு தலைமலை இறைவனான மலைராயன் அருளால் பிள்ளை பேற்றுடன் சிறக்க வாழ்வார் என்று வாழ்த்தியுள்ளார். இக்கல்வெட்டு குறிப்பிடும் தலைமலை பாப்பாபட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சஞ்சீவிராய பெருமாள் கோவிலாக தற்போது அறியப்படும் இக்கோவில் மலையின் உச்சியில் அமைந்துள்ளது.
இவ்வழியில் தான் அய்யண்ணன் கட்டியதாக கூறும் படி மண்டபம் உள்ளது. பொதுவாக கட்டமைப்புகள் அமையும் இடத்தில் தான் அவற்றை கட்டியது பற்றிய செய்தி கல்வெட்டாக வெட்டப்படும்.
ஆனால் இங்கு கட்டடம் அமைந்துள்ள இடத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூரின் புறப்பகுதியில் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. எனவே படிமண்டபத்தை உருவாக்கிய அய்யண்ணன் பாப்பாபட்டி கிராமத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதசெய்கிறது. இக்கல்வெட்டின் அமைப்பை கொண்டு இது 17-ம் நூற்றாண்டாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story