சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. டெல்லி, மேற்கு வங்காளம், அஸ்சாம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் கலவரமாக மாறி உள்ளது.
சென்னை,
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், குடியுரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நேற்று சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மாணவர்கள் சுமார் 1 மணி நேரம் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு, கல்லூரி வளாகத்துக்குள்ளேயே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன கோஷங்களையும் எழுப்பினர். பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.
இதே போன்று சென்னை பல்கலைக்கழக மாணவ-மாணவிகளும் ஏராளமானோர் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் கூடி நின்று குடியுரிமை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி மாணவர்களும் நேற்று 2-வது நாளாக கல்லூரி வளாகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்தையொட்டி, சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story