ஒன்றியகுழு உறுப்பினர் பதவி: தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 5 ஒன்றியங்களில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல், ராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம் மற்றும் மோகனூர் (கிழக்கு) என 5 ஒன்றியங்களில் ஒன்றியகுழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரின் பெயர் பட்டியல் தலைமை கழகத்தின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ராசிபுரம் ஒன்றியம் 1-வது வார்டு சத்யா, 2-வது வார்டு வனிதா, 3-வது வார்டு யுவராணி, 4-வது வார்டு கே.பி.ஜெகநாதன், 5-வது வார்டு ஏ.கே.பாலசந்திரன், 6-வது வார்டு சவுபாக்கியவதி, 7-வது வார்டு மணி, 8-வது வார்டு சந்திரா, 9-வது வார்டு பிரேமா.
கொல்லிமலை ஒன்றியத்தில் 1-வது வார்டு முருகேசன், 2-வது வார்டு ஆண்டி, 3-வது வார்டு செல்வராஜ், 4-வது வார்டு மாதேஸ்வரி, 5-வது வார்டு வசந்தி, 7-வது வார்டு புகழேஸ்வரி.
சேந்தமங்கலம் ஒன்றியத்தில் 1-வது வார்டு சரசு, 2-வது வார்டு டயானா, 3-வது வார்டு சுபாஷினி, 4-வது வார்டு கீதா, 5-வது வார்டு சித்ரா, 6-வது வார்டு மணிமாலா, 7-வது வார்டு அருண், 8-வது வார்டு ராணி, 9-வது வார்டு பெரியசாமி.
நாமக்கல் ஒன்றியத்தில் 1-வது வார்டு சரஸ்வதி, 3-வது வார்டு பேபி, 4-வது வார்டு சிவமணி, 5-வது வார்டு கோவிந்தம்மாள், 6-வது வார்டு அனிதா, 7-வது வார்டு சாரதாமணி, 8-வது வார்டு பெரியக்காள், 9-வது வார்டு மதி, 10-வது வார்டு கருணாம்பிகை, 11-வது வார்டு செந்தில்குமார், 12-வது வார்டு கிருபாகரன்.
மோகனூர் கிழக்கு ஒன்றியத்தில் 1-வது வார்டு சக்திவேல், 2-வது வார்டு மகேஸ்குமார், 3-வது வார்டு வேலுசாமி, 4-வது வார்டு ஜெயந்தி, 6-வது வார்டு ராஜாகண்ணன், 13-வது வார்டு ராஜேஸ்வரி, 14-வது வார்டு மைனாவதி, 15-வது வார்டு செல்வி.
இதேபோல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 7-வது வார்டுக்கு வேட்பாளர் ராஜேந்திரன், 8-வது வார்டு நல்லதம்பி, 9-வது வார்டு காளியப்பன், 11-வது வார்டு எம்.பி.கவுதம், 12-வது வார்டு சரண்யா, 16-வது வார்டு விமலா சிவக்குமார், 17-வது வார்டு பிரபாவதி ஆகியோர் அறிவிக்கப்பட்டு இருப்பதாக நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story