ஆன்லைனில் லாட்டரி விற்ற 3 பேர் கைது
அருப்புக்கோட்டையில் ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை,
விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஆன்லைன் லாட்டரி வாங்கி கடனாளியான ஒரு குடும்பத்தில் விஷம் குடித்து குழந்தைகள், கணவன், மனைவி உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த தற்கொலை சம்பவம் வாட்ஸ்-அப் மூலம் தமிழகம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்பவர்களை தமிழகம் முழுவதும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து அருப்புக்கோட்டையில் அன்பு நகரை சேர்ந்த கருப்பசாமி (வயது 45), நாடார் மேல வீதியை சேர்ந்த சிவசங்கரன் (70), வேல்முருகன் காலனியை சேர்ந்த சக்திவேல் (55) ஆகியோர் அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து டவுன் போலீசார் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story