தி.மு.க.வில் நிலவும் உட்கட்சி பூசலால் அ.தி.மு.க.வினர் வெற்றி பெறுவது நிச்சயம் - கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி


தி.மு.க.வில் நிலவும் உட்கட்சி பூசலால் அ.தி.மு.க.வினர் வெற்றி பெறுவது நிச்சயம் - கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 18 Dec 2019 3:45 AM IST (Updated: 17 Dec 2019 6:46 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வில் நிலவும் உட்கட்சி பூசலால் அ.தி.மு.க.வினர் வெற்றி பெறுவது நிச்சயம் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

கமுதி,

கமுதி யூனியன் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அப்போது மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் பரமக்குடி சதன் பிரபாகர், திருவாடானை கருணாஸ் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதனை தொடர்ந்து கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:– தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தில் மழை காலம் தொடங்குவதற்கு முன்பே கண்மாய்கள், குளங்கள், ஆறுகள், வரத்து கால்வாய்கள் குறித்த நேரத்தில் மராமத்து செய்து, மழைநீர் தேக்கப்பட்டதால் இந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தி.மு.க.வில் முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் என உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. அங்கு வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்கள் பலருக்கு கட்சியில் போட்டியிட ‘சீட்‘ கிடைக்காமல் உள்ளனர். இதனால் தி.மு.க.வில் பூசல் அதிகரித்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறும் நிலையில் உள்ளனர். குறிப்பாக உட்கட்சி பூசல் ராமநாதபுரம் தி.மு.க.வில் தான் அதிகம். இதனால், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பலர் தற்போதே வெற்றி பெற்றது போன்று மகிழ்ச்சியில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story