குழந்தை பாக்கியம் கிடைப்பதாக கூறி மருந்துகளை விற்று மோசடி செய்த போலி டாக்டர் கைது


குழந்தை பாக்கியம் கிடைப்பதாக கூறி மருந்துகளை விற்று மோசடி செய்த போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2019 4:30 AM IST (Updated: 18 Dec 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை பாக்கியம் கிடைப்பதாக கூறி மருந்துகளை விற்று பணம் மோசடி செய்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

பாவூர்சத்திரம், 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர், பனையடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 3 பேர் கொண்ட கும்பல் கார்களில் வந்து தங்களை டாக்டர்கள் என்று கூறினார்கள். குழந்தை இல்லாத தம்பதியினரிடம் தாங்கள் தரும் மாத்திரையை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறி மருந்துகளை விற்பனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் கொடுத்த மருந்துகளால் குழந்தை பாக்கியம் அடையாததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள், அவர்களின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர்கள் செல்போனை எடுக்கவில்லை. இதனால் வேறு சிலரின் தொலைபேசி எண்கள் மூலம் அவர்களை புதிய நபர்களுக்கு மருந்துகள் தேவைப்படுவதாக கூறி செட்டியூருக்கு வரவழைத்தனர்.

இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கு வந்தனர். பின்னர்அவர்களை பொதுமக்கள் பிடித்து பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை முருகன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் (வயது 42), அதே பகுதியை சேர்ந்த கோகுல் (21), தேன்மலை பகுதியை சேர்ந்த தினே‌‌ஷ் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் சத்து மாத்திரைகளை கொடுத்து பல இடங்களில் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போலி டாக்டரான சீனிவாசனை கைது செய்தனர். மற்ற 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story