குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் ஜமாத் காப்பாளர் பொறுப்பில் இருந்து அ.தி.மு.க. எம்.பி. ‘திடீர்’ நீக்கம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் ஜமாத் காப்பாளர் பொறுப்பில் இருந்து அ.தி.மு.க. எம்.பி. ‘திடீர்’ நீக்கம்
x
தினத்தந்தி 18 Dec 2019 4:30 AM IST (Updated: 18 Dec 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் ராணிப்பேட்டை ஜமாத் காப்பாளர் பொறுப்பில் இருந்து அ.தி.மு.க.வை சேர்ந்த முகம்மது ஜான் எம்.பி. நீக்கப்பட்டுள்ளார்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை மண்டித்தெருவில் உள்ள மஜீத்தில் ராணிப்பேட்டை சர்ஜமாத் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ராணிப்பேட்டை சர்ஜமாத் தலைவர் அப்துல் வாஜித் தலைமை தாங்கினார். செயலாளர் அயாத்பாஷா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* வருகிற 22-ந் தேதி மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் ராணிப்பேட்டையில் கண்டன ஊர்வலமும், முத்துக்கடையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்துவது.

* மத்திய அரசு மாநிலங்களவையில் கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அ.இ.அ.தி.மு.க. எம்.பி. முகம்மதுஜானை ராணிப்பேட்டை சர்ஜமாத் காப்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கி வைப்பது.

மேற்கண்டவை உள்பட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா ஆகிய பகுதிகளில் உள்ள சர்ஜமாத்தின் நிர்வாகிகள், முத்தவல்லிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை சர்ஜமாத் காப்பாளராக கடந்த 2010-ம் ஆண்டு முதல் முகம்மது ஜான் எம்.பி. பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story