துணை முதல்-மந்திரி பதவியை ரத்து செய்ய வேண்டும் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
துணை முதல்-மந்திரி பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
பெங்களூரு,
பா.ஜனதாவை சேர்ந்த ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரியாக இருக்கும் எடியூரப்பா ஆட்சி நிர்வாகத்தை திறம்பட நடத்தி வருகிறார். அவர் செல்வாக்கு மிக்க தலைவர். இந்த சூழ்நிலையில் 3 துணை முதல்-மந்திரிகள் தேவை இல்லை. அந்த பதவியை ரத்து செய்ய வேண்டும். 40 ஆண்டு காலம் அரசியலில் முத்திரை பதித்துள்ளவர் எடியூரப்பா. கடந்த காலங்களில் ஆட்சி நிர்வாகத்திலும் அவர் சிறப்பான முறையில் செயல்பட்டு உள்ளார்.
துணை முதல்-மந்திரி பதவிக்கு அரசியல் சாசன அங்கீகாரம் கிடையாது. அதனால் 3 பேரிடம் உள்ள துணை முதல்-மந்திரி பதவியை பறிக்க வேண்டும். கட்சியின் நலனுக்காக இந்த முடிவு எடுப்பது நல்லது. 2008-ம் ஆண்டு 20 மாதங்கள் துணை முதல்-மந்திரியாகவும், அதன் பிறகு 3 ஆண்டுகள் முதல்-மந்திரியாகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் எடியூரப்பா சிறப்பாக செயல்பட்டு உள்ளார்.
தென்இந்தியாவில் கர்நாடகத்தில் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தி பா.ஜனதா ஆட்சி அதிகாரத்தில் அமர்த்திய பெருமை எடியூரப்பாவுக்கு உண்டு. யாரையும் இலக்காக கொண்டு இந்த கருத்தை நான் கூறவில்லை. யார் மீதும் எனக்கு விரோதம் இல்லை. தாவணகெரே மாவட்டத்திற்கு மந்திரிசபையில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இவ்வாறு ரேணுகாச்சார்யா கூறினார்.
இந்த கருத்து பா.ஜனதாவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story