மாவட்ட செய்திகள்

வேப்பூர் அருகே, கார் மோதி பள்ளி மாணவன் சாவு + "||" + Near Vepur, School student dies in car collision

வேப்பூர் அருகே, கார் மோதி பள்ளி மாணவன் சாவு

வேப்பூர் அருகே, கார் மோதி பள்ளி மாணவன் சாவு
வேப்பூர் அருகே கார் மோதி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர், 

வேப்பூர் அருகே திருநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் பிரவீன் (வயது 8). இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரவீன் தனது நண்பர்களுடன் அங்குள்ள ஏரிக்கு குளிக்க சென்றான். குளித்து முடித்ததும் அவர்கள் அனைவரும் தங்களது வீட்டுக்கு புறப்பட்டனர்.

அப்போது அங்குள்ள சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று பிரவீன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பிரவீன் பரிதாபமாக இறந்தான். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஸ்ரீரங்கத்தில் வீட்டு வாசலில் கோலம் போட்ட சிறுமி கார் மோதி பலி - தாய் கண்முன்னே பரிதாபம்
ஸ்ரீரங்கத்தில் வீட்டு வாசலில் கோலம் போட்ட சிறுமி கார் மோதி தாய் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
2. கார் மோதி மகனுடன் கர்ப்பிணி சாவு
மாமல்லபுரம் அருகே புதிய கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்ற நிறைமாத கர்ப்பிணி, தன் மகனுடன் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
3. மாமல்லபுரம் அருகே, கார் மோதி மகனுடன் கர்ப்பிணி சாவு
மாமல்லபுரம் அருகே புதிய கல்பாக்கம் கிழக்கு கடற் கரை சாலையை கடக்க முயன்ற நிறைமாத கர்ப்பிணி, தன் மகனுடன் கார் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
4. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-1 மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு
சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாகஇறந்தான். இந்த விபத்துகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5. ராணிப்பேட்டையில் கார் மோதி மூதாட்டி சாவு - தாய், மகள் படுகாயம்
ராணிப்பேட்டையில் கார் மோதி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். தாய், மகள் படுகாயம் அடைந்தனர்.