குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2019 10:30 PM GMT (Updated: 18 Dec 2019 7:12 PM GMT)

குடியுரிமை திருத்த சட்ட த்தை திரும்ப பெற வலியுறுத்தி, காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆறுமுகநேரி, 

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்ட த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், காயல்பட்டினத்தில் நேற்று முழு கடையடைப்பு நடந்தது. இதனால் பஸ் நிலையம், மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் திறக்கப்படாததால் வெறிச்சோடியது. மருந்து கடை, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து மாலையில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் அபுல் ஹசன் கலாமி தலைமை தாங்கினார். தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிரு‌‌ஷ்ணன் எம்.எல்.ஏ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, சிங்கித்துறை பங்குத்தந்தை சில்வஸ்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் காதர் மைதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஆசாத்,

தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, நகர செயலாளர் முத்து முகமது, ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் காயல் அமானுல்லா, த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர் முர்‌ஷித், நகர தலைவர் ஜாகீர் உசேன், நகர காங்கிரஸ் தலைவர் முஸ்தபா கமால், முஸ்லிம் லீக் மாவட்ட துணை செயலாளர் அப்துல் வாஹித் மற்றும் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானவர்கள் மெயின் ரோடு வரையிலும் திரண்டு இருந்ததால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

Next Story