உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் இன்பதுரை எம்.எல்.ஏ. பேச்சு
உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் என அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் இன்பதுரை எம்.எல்.ஏ. பேசினார்.
குழித்துறை,
குமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் மார்த்தாண்டம் அருகே சிராயன்குழி கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் தலைமை தாங்கினார். துணை செயலாளர் சிவகுற்றாலம் வரவேற்றார்.
கூட்டத்தில் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளருமான இன்பதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வெற்றிக்கு உழைக்க வேண்டும்
அ.தி.மு.க.வில் மட்டுமே சாதாரண உறுப்பினர்களும் உயர் பதவி பெற முடியும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதாரண நிலையில் இருந்து தான் உழைப்பால் உயர்ந்துள்ளார். நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற வேண்டும். இந்த வெற்றிக்கு அ.தி.மு.க.வினர் கடுமையாக உழைக்க வேண்டும்.
ராதாபுரம் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட்ட போது என்னை எதிர்த்து நின்றவர் அசுரபலம் கொண்டவர் ஆவார். அதனையும் மீறி நாம் வெற்றி பெற்றோம். இப்போது அந்த விவகாரம் கோர்ட்டில் உள்ளது. அதில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிர்வாகிகள்
கூட்டத்தில், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் தமிழ் மகன் உசேன், மாநில தொழிற்சங்க துணை செயலாளர் ராஜையன், மேற்கு மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் அருள்பிரகாஷ் சிங், குழித்துறை நகர செயலாளர் ராஜன், மேற்கு மாவட்ட இணை செயலாளர் கே.ஏ.சலாம், வள்ளியூர் ஒன்றிய செயலாளர் அழகானந்தன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜ், நெல்லை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவர் எட்வர்ட்சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்கு மாவட்ட பொருளாளர் திலக்குமார் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story